சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கபடதாரி’. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது.
லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நந்திதா ஸ்வேதா பேசும் போது, ஒரு படத்தில் சின்ன வேடம் என்றால் பெயர் சொல்லும்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
கபடதாரி படத்தில் எனக்கும் சிபிராஜுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியை விட ஜெயபிரகாஷுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
நிறைய படங்களில் நானும் அவரும் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறோம். எனக்கும் அவருக்கு அப்பா, மகள் என்ற நல்ல உறவு இருக்கிறது என்றார்.