எங்க அப்பாவுக்கும் என் அம்மாவோட அப்பாவுக்கும் ஒரே வயசு.. ரசிகர்களை அழ வைத்த சுருதி!

3 years ago 205

இரண்டாம் தாரமாக தனது அம்மா வயதான அப்பாவுக்கு திருமணமாகி போன சோக கதையை சொல்லி ஒட்டுமொத்த போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் அழ வைத்து விட்டார் சுருதி.

மாடல் அழகியான சுருதி தனது வாழ்வில் நடந்த பல கசப்பான அனுபவங்களை அழுதபடியே சொல்லி மற்றவரையும் அழ வைத்து விட்டார். இந்த கடந்து வந்த பாதை எபிசோடில் சுருதி சொன்ன கதைக்கு பலரும் ஹார்ட்டீன்களை அளித்து தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவித்தனர்.

எங்க அப்பாவுக்கு எங்க அம்மா இரண்டாம் தாரமாக மணமுடிக்கப் பட்டார். அப்பாவோட முதல் மனைவி இறந்துட்டதால சொந்தத்துக்குள் எங்கம்மாவை அவருக்கு கட்டி வச்சிட்டாங்க. 

எங்க அம்மாவோட வாழ்க்கை மற்ற திருமணமான பெண்களின் வாழ்க்கை போல சந்தோஷமாக இல்லை என்று ஸ்ருதி தனது சோக கதையை சொல்ல ஆரம்பித்தார்.

என் அப்பாவுக்கும் என் அம்மாவோட அப்பாவுக்கும் ஒரே வயசு என சுருதி சொல்ல ஆரம்பித்ததும் அதுவரை ஏதோ மொக்கை கதையை சுருதி கூறப் போகிறார் என நினைத்த நமிதா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் அவரது கதையை ஆவலுடன் கேட்க ஆரம்பித்தனர்.

அம்மா என தனது அம்மாவை பற்றி சொல்லும் போதே அழ ஆரம்பித்த சுருதி கடைசி வரை பல இடங்களில் கண்ணீர் சிந்தியபடியே தனது கண்ணீர் கதையை சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களின் அனுதாபங்களையும் அள்ளி உள்ளார். சமூக வலைதளங்களில் சுருதிக்கு இப்போதே பலர் ஆர்மியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.

நான் எங்க அம்மா வயித்துல வந்த உடனே எனக்கு ஏற்கனவே வாரிசு இருக்கு, உனக்கு வேணும்னா இந்த குழந்தையை பெத்துக்க என என் அப்பா சொன்னாரு. அவரை பொறுத்தவரை நான் வேண்டாதவள், Unwanted Child என சுருதி சொல்லும் போது பலருக்கும் நிச்சயம் கண்ணீர் கசிய ஆரம்பித்து இருக்கும்.

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான எந்தவொரு பந்தமும் எங்களிடத்தில் இருந்ததே கிடையாது. அப்பா என்னை தொட்டுக் கூட பேசியது இல்லை. நான் அவரை அப்பான்னே கூப்பிட்டது இல்லை. மற்ற தோழிகள் அவர்கள் அப்பாவுடன் அன்போடு இருப்பதை அறிந்து பல முறை அழுது இருக்கேன் என சுருதி சொல்லி ஸ்கோர் செய்து விட்டார்.

எனக்கு 11 வயசு இருக்கும் ஸ்கூல் போயிட்டு வீட்டுக்கு வரப்போ எல்லாரும் சோகமா இருந்தாங்க.. அப்பா இறந்துட்டாங்கன்னு சொன்னதும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்பாடா எனக்கு ஃப்ரீடம் கிடைச்சிருச்சு இனிமே என்னை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது என நினைத்தேன். 

அது சரியா தவறா என்று எனக்கு அப்போது தெரியாது. ஆனால், அப்போதைக்கு என் மனநிலை அப்படித்தான் இருந்தது. அப்பா செத்து காரியம் நடந்த அந்த 16 நாளும் செம ஹாப்பியா இருந்தேன் என்றார்.


அம்மாவை அப்பா கல்யாணம் பண்ணும் போதே அவருக்கு 50 வயசு. அப்பா போன பிறகு வீட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போனது. அம்மா டெய்லர் அவங்க சம்பாதிக்கிற காசுல தான் 10 ரூபாய்க்கு ரவா வாங்கி உப்மா செய்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். சொந்தக்காரங்க யாருமே ஹெல்ப் பண்ணல என்றார்.

எங்க அம்மாவுக்கும் ஒரு சின்ன ஆக்சிடன்ட் நடந்துச்சு அப்புறம் எங்களோட வாழ்க்கையே முடிஞ்சுடும் போல ஆச்சு, ஹைட்டா இருக்கிறதனால ஸ்போர்ட்ஸ்ல சேர்ந்து விளையாட ஆரம்பிச்சேன். 

வெறித்தனமா படிச்சேன். பிடெக்ல டிஸ்டிங்ஷன் எடுத்து பாஸ் ஆனேன். 6 கம்பெனியில வேலை வாய்ப்பு கிடைத்தது. நானே ஒண்ண சூஸ் பண்ணேன் இப்போ இங்க வந்து நிக்கிறேன் என அதன் பிறகு சுருதி சொல்வதை எல்லாம் கேட்ட ரசிகர்கள் என்ன இது சர்கார் படத்துல விஜய் சொல்ற கதையா இருக்கே என கிண்டல் அடிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...