2019 ம் ஆண்டு கார்த்தி நடித்து வெளிவந்த படம் கைதி. பாடல்களே இல்லாமல் ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
சென்டிமென்ட், ஆக்ஷன், த்ரில்லர் கலந்து எடுக்கப்பட்ட இந்த படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. கார்த்தி, லோகேஷ் கனகராஜ் இருவருக்குமே மிகப் பெரிய பிரேக் கொடுத்தது.
கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் 2021 ம் ஆண்டில் வெளிவந்த படங்களிலேலே வசூல் சாதனை படத்தை, மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
இதனால் கைதி 2 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டார். தற்போது இயக்கி வரும் விக்ரம் படத்தை முடித்த பிறகு, விஜய்யை வைத்து மற்றொரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் விஜய், பீஸ்ட் ரிலீசான உடனேயே தளபதி 66 பட வேலைகளில் இறங்க உள்ளதால், விக்ரம் படத்தை முடித்து விட்டு கைதி 2 படத்தின் வேலைகளை துவக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம்.
கைதி 2 படத்திற்கான கதையையும் லோகேஷ் கனராஜ் தயார் செய்து முடித்து விட்டாராம். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் இயக்க போகிறாராம்.
விக்ரம் படத்தை 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிட்டதற்கு முன்பாக ஆகஸ்ட் மாதத்தில் கைதி 2 ஷுட்டிங்கை துவக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம்.
கைதி படம் தில்லி, அடைக்கலம் பற்றி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் தில்லி மற்றும் அடைக்கலத்தின் பின்னணி கதை பற்றியதாம்.
இந்த படத்தை 2023 ல் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் நடித்த கைதி படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் கார்த்தி நடித்த தில்லி ரோலில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார்.