பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது காதல்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

2 years ago 277

பிக்பாஸ் தமிழ் அப்டேட்

பிக்பாஸ் சீசன் 6 இல் சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர்களில்  ஒருவர்  ஷிவின்.  சமீபத்தில் தனது உருக்கமான காதலை ரக்சிதாவுடன் பகிர்ந்து கொண்ட ஷிவின் அந்த காதலை தனது அம்மாவுக்காக பிரிந்துவிட்டதாக கூறினார். 

இதனை அடுத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே கதிரவன் உடன் ஷிவினுக்கு க்ரஷ் இருப்பதாக தெரிகிறது.


தனது க்ரஷை சூசகமாக ஷிவின் கதிரவனிடம் சொல்லியும் அவர் அதனை இன்னும் அதை புரிந்து கொள்ளவில்லை என்று அவருடைய ரியாக்சன் இருந்து தெரியவருகிறது.

ஏற்கனவே கதிரவனை ஷெரினா காதலித்ததாகவும் அதன்பின் கதிரவன் தான் தன்னுடைய கிரஷ் என்று விஜே மகேஸ்வரி கூறியிருந்தார்.


இந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது ஷிவின் இணைந்திருக்கும் நிலையில் இந்த சீசனின் அமீர் - பாவனியாக கதிரவன் - ஷிவின்  மாறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.