பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

3 years ago 361

தமிழில் கம்பீரம் படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகையான ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 

தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 


ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். 

சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். 

டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...