அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா' படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ள இந்தப்படத்தில் அவரின் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. புஷ்பா' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக டின்னர் டேட்டிங் சென்றதாக பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேறி ஒன்றாக காரில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கடந்த 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன், ராஷ்மிகா இணைந்து நடித்த தெலுங்கு படமான 'கீதா கோவிந்தம்' ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன.
அண்மையில் இருவரும் ஒரே நேரத்தில் பாரிஸுக்கு சுற்றுலா சென்ற விவகாரம் டோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.