நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடித்து வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன்.
ஒரு கிராமத்து குடும்ப பின்னணியில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்காக எடுக்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கும் படம் தான் இந்த ஈஸ்வரன்.
குடும்பத்தோடு சென்று படம் பார்க்கும் விதமாக பாசம்,காதல்,சண்டை, நகைச்சுவை என அனைத்தையும் கலந்து கட்டி சுருக்கமாக தந்திருக்கிறார்கள்.
பாரதிராஜா, மனோஜ், நந்திதாதாஸ், நிதி அகர்வால்,பாலசரவணன் ,காளி, வெங்கட் என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி பலதரப்பட்ட பரவலான விமர்சனங்கள் வந்த நிலையிலும் கூட, படத்தை குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம் என்ற விமர்சனம் நிறைய இடங்களில் காணக் கிடைக்கிறது.
படப்பிடிப்பிற்கு குறுகிய நாட்கள் எடுத்துக்கொண்டதனாலோ என்னவோ படம் தொடங்குவதும் தெரியாமல், இடைவேளை வருவதும் தெரியாமல் முடிவதும் தெரியாமல் என முடிந்து விடுகிறது.
சிம்புவைப் பொறுத்தவரை அவர் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.அவர் நடிப்பையோ,நடனத்தையோ, காதலையோ எங்கேயும் குறை கூறும் படி ஒன்றுமில்லை.
இதைப்போலவே பாரதிராஜாவும் மனோஜும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். இவ்வாறு பாலசரவணன் மிக மிக இயல்பாக நகைச்சுவை செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
குடும்பத்தோடு அனைவரும் ஒருமுறை பார்க்கலாம் என்ற இடத்திலேயே இந்த படம் இருக்கிறது. காட்சிகள் சில இடங்களில் பாதியிலேயே முடிவதை போன்று இருக்கிறது. இதை மட்டும் இயக்குனர் ஒருமுறை கவனித்திருக்கலாம்.
இருந்தாலும் கொரோனாவுக்கு பிறகு 50 சதவீத திரையரங்குகள் தான் திறக்கப்பட்ட நிலையிலும் மனந்தளராமல் ரசிகர்களுக்காகவும் திரையரங்க உரிமையாளர்களுக்காகவும் ஈஸ்வரன் ஓடிடியை நாடாமல் திரையரங்கிலேயே வெளியிடப்பட்டது பாராட்டப்பட வேண்டியதே.
மாஸ்டர் படம் வருகிறது என்று எண்ணி தள்ளிப்பாேடாமல் ரசிகர்கள் பொங்கலை கொண்டாட வேண்டும் என எண்ணிய சிம்பு உள்ளிட்ட ஈஸ்வரன் படக்குழுவினர் எப்போதும் மாஸ் தான்.