மகளின் விவாகரத்துக்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரஜினி கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.
நேற்று முன்தினம் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பு வந்தது. மறுதினம் காலையில் இருந்தே ரஜினி வீட்டில் இல்லையாம்.
அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டதாக ஊடகத்தினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு சென்றதற்கான உண்மையான காரணம் மகளின் விவாகரத்து முடிவுதானாம்.
அவர் எங்கு போனார் என்கிற விவரம் வெளியாகவில்லை. அது மட்டும் இன்றி, விவாகரத்து குறித்து எந்த ஒரு கருத்தும் ரஜினி தரப்பிடம் இருந்து வரவில்லை என்பதால் பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றது.
இதற்கு முற்றுபுள்ளி வைக்க ரஜினிதான் மௌனம் களைக்க வேண்டும்.