மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, இந்திய மத்திய அரசின் 2021ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனை ரசிகர்கள் மறைந்தாலும், மக்களின் மனதில் வாழும் கலைஞன் என பாராட்டி வருகின்றனர்.
மத்திய அரசு, கடந்த 1954ம் ஆண்டு முதல் சாதனைகள் படைத்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இவை பொதுவாக பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. கலாச்சாரம், இசை, நடனம், ,அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில், இந்தாண்டு பத்ம விபூஷன் விருதுகள் 7 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது.
பத்ம பூஷன் 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ 102 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில் மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு விருது கிடைத்துள்ளது.