பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெரும்பாலான பிரபலங்கள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வீட்டில் தான் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் வீடு கொஞ்சம் பெரிதாக இருப்பது போன்று தெரிகிறது. மற்றப்படி வேறு எந்த மாற்றமும் இதுவரை இல்லை.
கடந்த சீசன்களில் ஹவுஸ் மேட்டுகளை எழுப்ப பாடல்கள் ப்ளே செய்யப்படும் அதை போன்றே இந்த சீசனிலும் பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது. கடந்த சீசன்களில் பாடல் போடப்பட்டதும் போட்டியாளர்கள் முகத்தைக் கூட கழுவாமல் எழுந்து வந்து ஆட்டம் போடுவார்கள்.
ஆனால் இந்த சீசனில் பிக்பாஸுக்கு முன்பே போட்டியாளர்கள் எழுந்து ரெஃபிரஷ் ஆகியுள்ளனர். முதல் நாள் என்பதால் இப்படியா அல்லது போக போக மாறிவிடுவார்களாக என்பது வரும் நாட்கள் தெரிந்து விடும்.
முதல் நாளான நேற்று கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பாடலை கேட்டதும் எப்போடா பாட்டுப் போடுவார்கள் என காத்திருந்ததை போல் ஆட்டம் போட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காமா போனாலும் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான டிக்கிலோனா படத்தில் இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பாஸிட்டிவ் என்றால் தமிழ் அர்த்தம் என்ன என ஐக்கி பெர்ரியும் அக்ஷராவும் கேட்க பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு பெரும் விவாதம் நடந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொன்று சொல்ல யோவ் இங்கிலிஷ் தெரியுமா தெரியாத என்று ஆண் போட்டியாளர்களை அதட்டினார் அக்ஷரா. கடைசியாக இமான் அண்ணாச்சி நல்லவிதம் என கூறி அந்த விவாதத்துக்கு எண்ட் கார்டு போட்டார்.
அதேடு இரவு எத்தனை மணியாக இருந்தாலும் தமிழில் என்ன டவுட் வந்தாலும் என்னை கேளுங்கள் என்றும் பர்மிஷன் கொடுத்து சென்றார் இமான் அண்ணாச்சி. இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் இப்போ இல்ல.. வந்தா சொல்கிறோம் என்று கூறினர். இதன் மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலருக்கு நெகட்டிவ், பாஸிட்டிவ் ஹானஸ்ட் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை என்பது தெரிய வந்தது