தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு தெலுங்குவில் மகேஷ்பாபு இந்தியில் அஜய் தேவ்கன் மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் ட்ரெய்லரை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.