அசால்டாக அசத்தி இருக்கும் சிவகார்த்திகேயன்! டாக்டர் பட விமர்சனம்!

3 years ago 812

கோலமாவு கோகிலா என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார்.  ஓடிடியா திரையரங்கா என்ற குழப்பத்தில் இருந்த இத்திரைப்படம் ஒரு வழியாக என்று திரையரங்கில் வெளியானது.  

நீண்ட நாட்களுக்கு பின் வரும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் அவரது ரசிகர்களும், தங்களது அடுத்த படத்தின் இயக்குனர் என்று விஜய் ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்தனர்.  இவர்களின் காத்திருப்புக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் டாக்டர் திரைப்படம் அமைந்துள்ளது.  

காமெடி ஹீரோவாக தொடங்கி ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காட்டக் கூடிய படமாக உள்ளது டாக்டர்.  எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக சமத்து பையனாக காணப்படுகிறார் சிவா.  முதல் இரண்டு கியரில் வண்டி மெதுவாக செல்வது போல படம் ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் மெதுவாகவே நகர்கிறது.  

அதன்பின் டாப் கியரில் செல்லும் படம் எங்கேயும் நிற்கவில்லை.  டாக்டர் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக ரவி மற்றும் யோகி பாபுவை கூறலாம்.  இவர்களது ஒன்லைனில் திரையரங்கமே அதிர்கிறது.  இரண்டாம் பாதியில் வரும் வில்லன் வினய் அதிரடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக காணப்படுகிறார்.   

பிரியங்கா மோகனுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும்.    அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு போன்றோர் காமெடியில் அசத்தி உள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு சீனையும் அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.  செல்லம்மா பாடல் யூ டியூபில் வெளியாகி பல சாதனைகளை படைக்க உள்ளது.  

என்னை தவிர வேறு யாரும் இதுபோல் ஒரு கதையை எழுதி இயக்கி விட முடியாது என்று மார்தட்டி சொல்லும் அளவிற்கு நெல்சன் இப்படத்திற்கு உழைத்துள்ளார்.  தனது முந்தைய படத்தை போலவே டார்க் காமெடி ஜானரில் கலக்கி இருக்கிறார் நெல்சன்.  

சீமராஜாவில் தனக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தவறை சிவா, டாக்டர் படத்தில் அதனை திருத்திக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளார்.  குறிப்பாக மெட்ரோ பைட் சீன் மற்றும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் பிரமாதம்.  மொத்தத்தில் இந்த டாக்டர் வசூல் மழையில் புது மருத்துவமனையே கட்டிவிடலாம்!

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...