நீங்க பண்றது கொஞ்சம் கூட சரி கிடையாது... கோபத்தின் உச்சத்தில் நகுலின் மனைவி...

3 years ago 1326

காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்  நடித்து பிரபலமானவர் நகுல்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நகுல் மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி இருவருக்கும் அண்மையில் தான் அகிரா எனும் பெண் குழந்தை பிறந்தது. 

இந்த தம்பதியர் பலருக்கும் பிடித்தமான தம்பதியராக வலம் வரும் நிலையில் இவர்களின் ரசிகர்கள் பலரும் இவர்களை சமூக வலைதளங்களின் மூலம் பின் தொடர்கின்றனர்.


இந்த நிலையில்தான் ரசிகர் ஒருவர் இவர்களுடைய மகள் அகிராவுக்கு தனி சமூக வலைதள பக்கத்தை தொடங்கி அதில் அகிராவின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்து வருவதை பார்த்து சற்று கோபமாகி இருக்கிறார்.

இது குறித்த தம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ள ஸ்ருதி, “ரசிகர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் பாசமும் புரிகிறது. ஆனாலும் ஒரு மைனர் குழந்தைக்கு இப்படியான தனி பக்கங்களை தொடர்வது தேவையில்லாதது. அது சட்டவிரோதமானது. 

குறிப்பாக பெற்றோர்களாகிய நாங்கள் அதை விரும்பவில்லை எனும்போதும், நாங்களே அகிராவுக்கான சமூகவலைதள பக்கத்தை தொடங்கவில்லை எனும்போது ரசிகர் ஒருவர் இப்படி தொடங்குவது எங்களுக்கு உடன்பாடு இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது.

இது பற்றி சம்பந்தப்பட்டவருக்கு நான் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்தேன். முதலில் அகிரா சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குவதாக அவர் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து மெசேஜ் அனுப்பும் போது, எந்த ரெஸ்பான்ஸூம் அவரிடத்தில் இருந்து இல்லை. 

எனவே அனைவரும் அந்த குறிப்பிட்ட அந்த பக்கத்தை ரிப்போர்ட் செய்யுங்கள். இதுபோன்று வேறு பக்கங்களை பார்த்தாலும் அவற்றை ரிப்போர்ட் செய்யுங்கள்!”என்று கடுப்பாகி பேசியிருக்கிறார்.

செலிபிரிட்டிகளின் குழந்தைகளுக்கு இப்படியான பக்கங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை அந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உடன்பட்டுதான் பெரும்பாலும் இருக்கின்றன. 

பெற்றோர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கும் சூழலில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்கிற தொனியில் பலரும் ஸ்ருதியின் இந்த ஆவேசத்துக்கு லைக் போட்டு வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...