நடிகை சமந்தாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பெண் அமைச்சர்!

3 months ago 138

நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு கேடிஆர் தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறிய கருத்திற்கு தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 

மேலும் இதுகுறித்து கேடிஆர், “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்” என அறிவித்துள்ளார். இப்படி தனது கருத்துக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகா நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

அதன்படி அவரின் சோசியல் மீடியா பக்கத்தில், “ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதை கேள்வி கேட்பதாகவே எனது கருத்து இருந்தது. உங்களை காயப்படுத்துவதற்காக நான் எதுவும் பேசவில்லை. 

என்னுடைய கருத்தால் நீங்களும் உங்கள் ரசிகர்களும் புண்பட்டிருந்தால் எந்த நிபந்தனையுமின்றி வாபஸ் பெறுகிறேன். வேறு எதுவும் நினைக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...