இந்த வயதில் 22 வயது மூத்த நடிகருடன் ஜோடி போடும் சினேகா... ரசிகர்கள் ஷாக்

3 years ago 3232

90 களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சினேகா. புன்னகைஇளவரசி என்ற பெயரை தென்னிந்திய சினிமாவில் பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது 39 வயதான நிலையில் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப் படத்தில் நடித்தார். 

ஏற்கனவே தனுஷுடன் இவர் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை சினேகா 60 வயதுக்கு மேலிருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தன்னை விட ஒரு வயது குறைவான நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா. தற்போது தன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார்.

முன்னதாக, நடிகைகள் கேத்ரீன் தெரேசா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் தற்போது சினேகா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...