விவாகரத்து எனது தனிப்பட்ட விஷயம் - பெண் அமைச்சருக்கு சமந்தா கொடுத்த பதிலடி!

3 months ago 75

நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு முன்னாள் முதல்வர் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

இந்நிலையில் அவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சமந்தா அவரின் சோசியல் மீடியா பக்கத்தில், “கொண்டா சுரேகா அவர்களே, நான் இந்த பயணத்தில் என்னவாக இருக்கிறேன் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். 

தயவு செய்து அதை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக நீங்கள் கூறிய வார்த்தைகளின் கணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மரியாதையுடனும், பொறுப்புடனும் அனுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

விவாகரத்து எனது தனிப்பட்ட விஷயம், அது எங்கள் இருவர் சம்மதத்துடன் தான் நடந்தது. அதில் எந்தவித அரசியலும் இல்லை. உங்கள் அரசியலில் என் பெயரை இழுக்காதீர்கள். நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அதையே தொடர விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...