துள்ளுவதோ இளமை பட நடிகரா இது? வயசாகி இப்படி ஆயிட்டாரே!

3 years ago 1884

2002ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் துள்ளுவதோ இளமை. இளமை துள்ளல் ஆக உருவான இந்த திரைப்படம் சூப்பர் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அவரை விட அதிக பெயரும் புகழும் கிடைத்தது உடன் நடித்த நடிகர் அபினய் என்பவருக்கு தான்.

பார்க்க பணக்கார வீட்டு பையன் தோற்றத்தில் இருந்த அவரை அனைவருக்கும் பிடித்து விட்டது. துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தனுஷுக்கு புது பட வாய்ப்பு கிடைத்ததோ, இல்லையோ, அபினய்க்கு கிடைத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஜங்ஷன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து விட்டார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு சினிமாவால் ஓரம் கட்டப்பட்ட அபினய் தொடர்ந்து விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


ஜெயம் ரவி நடிப்பில் உருவான தாஸ் படத்திலும் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த அபினய் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்த நடிகராக இது! என அனைவரும் ஷாக் ஆகும் அளவுக்கு கொஞ்சம் வயதாகி உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்பட்டார். 

சினிமாவில் ஏற்பட்ட தோல்வி காரணமாக வெளிநாடு சென்று மூன்று வருடம் வேலை பார்த்தாராம். அவரின் தற்போதைய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...