நம்ப வேண்டாம்… நடிகர் சிவகார்த்திகேயன் விடுத்த எச்சரிக்கை!

3 months ago 55

தமிழில் டாப் ஹீரோவாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பு தவிர எஸ்கே ப்ரொடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அதில் அவர் கூறியிருப்பதாவது, “எஸ்கே தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்தவிதமான காஸ்டிங் ஏஜெண்டுகளும் நியமிக்கப்பட்டவில்லை. 

இதை பயன்படுத்தி ஏமாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் அல்லது செய்தியிலிருந்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம். தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

காஸ்டிங் தொடர்பான எந்த தகவல்களும் நியாயமாக இருப்பதில்லை, எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...