அனிருத் கீர்த்தி சுரேஷ் குறித்து வெளியான தகவல் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
”இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து இவர் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான மகாநடி படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது இவர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் செல்வராகவன் நாயகனான நடிக்கும் சானி காயிதம் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், சில தினங்களாக கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாகவும் இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இதுகுறித்து இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “கீர்த்தி சுரேஷும், அனிருத்தும், காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கெனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. இப்போது 3வது தடவையாக இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று கூறினார்.