ஐட்டம் பாட்டுக்கு கூப்பிட்ட வரலட்சுமி... த்ரிஷா சொன்ன காரணம்... ஆனா இப்போ?

4 months ago 141

சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.

பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். 

கோட் படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை சேர்ந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை திரிஷா நடனமாடியிருக்கிறார். 

இதற்கு முன்பே நடிகை திரிஷா- விஜய் இருவரும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என பல படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்திலும் திரிஷா கதாநாயகி நடித்து இருந்தார். 


தற்போது கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். விஜய்- திரிஷா காம்பினேஷனில் வெளிவந்த இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அதோடு இதுவரை நடிகை திரிஷா ஒரு படலுக்கு மட்டும் நடனம் ஆடியதே கிடையாது.

இந்நிலையில் இது தொடர்பாக வெளியான வீடியோவில், சில வருடங்களுக்கு முன்பு பேட்டியில் வரலட்சுமி, திரிஷாவிற்கு போன் செய்து, நாம் இருவரும் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாமா? என்று கேட்டிருக்கிறார். 

அதற்கு திரிஷா, ஐட்டம் பாடலா என்று கேட்டு இருக்கிறார். அதற்கு வரலட்சுமி, இல்லை நாம் இருவரும் செய்து கரகாட்டம் போன்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாம் என்று சொன்னவுடன், சரி ஆடலாம். நான் இந்த மாதிரி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியது கிடையாது. எனக்கு விருப்பம் இல்லை. கேமியோ தான் பண்ணி இருக்கிறேன் என்று த்ரிஷா சொல்லியிருக்கிறார். 

இப்படி திரிஷா பேசியிருக்கும் வீடியோவை நெட்டிசன்கள் டேக் செய்து, ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட முடியாது என்று சொல்லிவிட்டு விஜயுடன் சேர்ந்து மட்ட பாடலுக்கு மட்டும் எப்படி இவர் ஆடி இருக்கிறார்? விஜய்க்காக கொள்கையை திரிஷா மறந்து விட்டாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...