15 நாட்கள் ரூமுக்கு வருவோம்.. கார்த்தி பட நடிகையை அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்த சம்பவம்!

1 year ago 18

சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை என்னவென்றால் வெள்ளித்திரையில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான்.

ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது மற்றவர்கள் அனைவருமே போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஜீவிதா. ஆபீஸ் என்னும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்து வந்த இவர் 2018 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஜீவிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி உள்ளார்.  அதில் அவர் சொன்னது நான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயின்னாக நடிக்க ஆசை. அந்த நேரத்தில் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக என்னிடம் கூறினார்.

மேலும் அவர் படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று சொன்னார். சில நேரம் கழித்து நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியுமா நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்  உங்களுடைய ரூமுக்கு வருவோம் இது 15 நாட்கள் நடக்கும் என்று கூறினார்கள்.

இவர்கள் சொன்னதை கேட்டவுடன் எனக்கு தூக்கி வாரி போட்டது. உடனே நான் அங்கிருந்து வந்து விட்டேன் என ஜீவிதா பேசினார்.

இந்த தகவல் இணையதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Read Entire Article