தூக்கத்தில் உண்மையை உளறிய மனோஜ்... மாமியார் மீது பழியை போட்ட விஜயா - சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

6 months ago 25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. 

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா இவங்க கொடுக்கும்போது கவரிங் நகை தான் கொடுத்து இருப்பாங்க என்று சொல்ல சுருதி அவங்க கவரிங் நகை கொடுத்திருந்தா அவர்களே அதை எப்படி விக்கிறதுக்காக கடைக்கு எடுத்துட்டு போயிருப்பாங்க என்று கேள்வி கேட்கிறார். 

நகை இவங்க அம்மா வீட்ல தான் மாறி இருக்கணும்.‌ இவ தானே அடிக்கடி அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வர என்று சொல்ல மீனா அப்படியெல்லாம் எதுவுமே நடந்திருக்காது என் வீட்ல அப்படி யாரும் பண்ண மாட்டாங்க என்று சொல்ல ஏன் உன் தம்பி பண்ணி இருக்கலாம் இல்ல அவன் திருடன் தானே என்று சொல்ல மீனா கோபப்படுகிறார். 

நகையெல்லாம் இவங்க அம்மா வீட்ல தான் இந்த மாறி இருக்கணும் என்று விஜயா உறுதியாக சொல்ல அண்ணாமலை அந்த செயின் என் அம்மா போட்டது அது எப்படி கவரிங்க மாதிரி இருக்கும் என்று கேள்வி கேட்க முத்து அப்படி கேளுப்பா என்று சொல்கிறார். 

விஜயா உங்க அம்மாவும் கவரிங் நகை போட்டால் என்னவோ என்று சொல்லி வார்த்தையை விட அண்ணாமலை கண்டபடி பேசாத எங்க அம்மா கவரிங் நகை போட்டு ஏமாத்த பாக்குறாங்களா? அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று கோபப்பட நான் அப்படி சொல்ல வரல நகை ஊர்ல மாறி இருக்கலாமல் என்று சொல்ல ஸ்ருதி அது எப்படி ஒரே நேரத்துல இரண்டு நகையும் கவரிங்கா மாறி இருக்கும் என்று கேள்வி கேட்க ரவி எனக்கென்னமோ நம்ம வீட்ல தான் ஏதோ மாறுன மாதிரி இருக்கு என்று சொல்கிறார். 

விஜயா என்னடா நான் என்னவோ மாத்தி வச்ச மாதிரி சொல்ற என்று கோபப்பட ரோகிணி மீனா கார் வாங்கி கொடுக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, அவங்களுக்கு எப்படி இவ்வளவு வருமானம் வந்தது ஒரு வேலை நகை வித்து இருப்பாங்களோ என்று சொல்ல எதுவும் தெரியாம கண்டுபிடி பேசாதிங்க ரோகிணி என்று மீனா கோபப்படுகிறார். 

விஜயா நகை அவங்க அம்மா வீட்டுல தான் மாறி இருக்கும் என்று இறுதியாக சொல்ல சுருதி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம் என்று சொன்னதும் மனோஜ் பதறிப் போய் போலீஸ் எல்லாம் எதுக்கு? நம்ம வீட்டு பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகணுமா என்று கேட்க அண்ணாமலை அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். 

முத்து உன்னையே நான் கண்டுபிடிக்கிறேன் என்று சவால் விட மனோஜ் ரூமுக்கு வந்து பிஸியாக தான் சூப்பரா சமாளிச்சுட்டம்மா நாம தப்பிச்சிட்டோம் என்று சொல்ல எனக்கு இப்பதான் பயமே அதிகமாக இருக்கு முத்துவுக்கு நிச்சயமா சந்தேகம் வந்திருக்கும் அவன் உண்மையை கண்டுபிடிக்காம விடமாட்டான் அதுக்குள்ள நாம நகையை மாத்தி வைக்கணும் என்று சொல்கிறார். பணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். 

அடுத்ததாக நகை விஷயத்தில் எப்படி உண்மையை வெளியே கொண்டு வருவது என யோசிக்கும் முத்துவிற்கு திடீரென மனோஜ் வாயால் உண்மையை வரவைக்கலாம் என்று யோசனை வர மீனா ஸ்ருதியை வைத்து போனில் பேச வைக்கலாம் என்று திட்டம் போட்டு கொடுக்க பிறகு ரவி ரெஸ்டாரண்டில் இருந்து மனோஜ்க்கு கடையிலிருந்து போன் போட்டு பேசுவது போல் பேச பிளான் போடுகின்றனர். 

அடுத்ததாக மனோஜ் கடையில் கல்லாவில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த ரோகிணி தட்டி எழுப்ப நகை, பணம், பொருள் என எல்லாவற்றையும் உளற என்ன என்னென்னமோ சொல்ற என்று கேட்டதும் மனோஜ் எதையோ சொல்லி சமாளிக்க ரோகினிக்கு கிரிஷ் போன் செய்ய தனியாக சென்று பேசுகிறார்.

இதற்கிடையில் மனோஜ்க்கு போன் செய்ய குரலை மாற்றி நீங்க எங்க கடையில கவரிங் நகை வாங்கியிருந்தீங்க அதனால உங்களுக்கு புதுசா நகை வாங்கினால் 20% டிஸ்கவுண்ட் இருக்கு என்று பேசுகிறார். மனோஜ் நான் எதையும் வாங்கலையே என்று சொல்ல சுருதி நீங்கதான் இரண்டு வளையல் ஒரு செயின் ஒரு தாலி வாங்கிட்டு போனீங்க.. எங்க கடையில வாங்குன அனுபவத்தை பத்தி சொல்லுங்க என்று கேட்க திருதிருவென முழிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Read Entire Article