அட்லீயை தொடர்ந்து பாலிவுட்டுக்கு பறக்கும் லோகி

6 days ago 40

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு இயக்குனர்கள் தான் தாவிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அட்லீ ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தி திரை உலகத்திற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் தற்போது தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிவிட்டார். அட்லீயை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

அதுவும் பாலிவுட்டின் டாப் ஹீரோ அமீர் கான் உடன் இணைந்து படம் பண்ண இருக்கிறார். அதைவிட பெரிய சர்ப்ரைஸ் ஆன விஷயம் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் அறிமுகத்திற்காக தேர்ந்தெடுத்து இருக்கும் கதை, லோகேஷ் மற்றும் சூர்யா இணையவிருந்த இரும்பு கை மாயாவி படத்தை தான் பாலிவுட்டில் இயக்க இருக்கிறார்.அட்லீ ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தி திரை உலகத்திற்கு அறிமுகமானார்.