மைக்கேல் ஜாக்சனுடன் ஷாலினி? ஷாக்காகும் ரசிகர்கள்..!

3 months ago 17

நடிகை ஷாலினி விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஷாலினி நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி ஹீரோயினாக நடித்த படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வரும் ஷாலினி தற்போது அவரின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரை பார்த்து வருகிறார். தற்போது எவர் கிரீன் ஷாலினி இன்று அவரது 43-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், இதுவரை யாரும் பார்த்திடாத நடிகை ஷாலினியின் அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சனுடன் நடிகை ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை கண்ட ரசிகர்கள் முதலில் குழம்பினர். மைக்கேல் ஜாக்சனுடன் ஷாலினி எப்போது புகைப்படம் எடுத்தார் என்று. ஆனால் பின்னர் தான் தெரியவந்தது அது உண்மையான மைக்கேல் ஜாக்சன் கிடையாது. அவரை போலவே வேடமிட்ட நபர் என்று.