'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' - முதல் பாடல் தொடர்பில் வெளியான தகவல்

4 months ago 26

தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். 

அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைதிருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். 

இது குறித்து நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு, கேமியோ ரோலில் நடித்ததற்கு தனுஷ் நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Read Entire Article