19 வருடம் கழித்து இணையும் ஜோடி.. என்ன படம் தெரியுமா?

2 months ago 32

கங்குவா படத்தை அடுத்து புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் நிலையில், நடிக ஸ்ரேயா சரணின் வேற லெவல் குத்துப்பாட்டு ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வெளியாகாத நிலையில், சூர்யா 44 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படமாவது, சூர்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, அடுத்ததாக ஆர்.ஜெ பாலாஜி படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் கதை ஏற்கனவே விஜய்க்கு சொன்ன கதை. அதில் தான் தற்போது சூர்யா நடிக்கிறார். இந்த படம் நிச்சயமாக வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருக்கும்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45வது படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இதை கேட்ட ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ளனர். ஆரம்பகாலத்தில் ஒன்றாக நடித்த இவர்கள் அதன்பின் இணைந்து நடிக்கவே இல்லை. இந்த நிலையில், 19 வருடம் கழித்து இந்த ஜோடி ஒன்று சேருவது படத்தின் மீது ஓவர் ஹைப் உருவாக்கியுள்ளது.