துஷாரா விஜயனிடம் தனுஷ் சொன்ன வார்த்தை.. வெளிப்படையாக கூறிய துஷாரா!

3 months ago 16

தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகை துஷாரா விஜயன். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி ஆகிய படங்களில் நடித்தார். 

சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திலும் தனுஷின் தங்கையாக துஷாரா நடித்திருந்தார். இதுமட்டுமின்றி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ராயன் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் குறித்து துஷாரா கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “வேட்டையன் மற்றும் ராயன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் தான் நடந்தது. நான் வேட்டையன் படத்தில் தலைவருடன் ஒரு சீன் நடித்து விட்டு ராயன் படம் சூட்டிங்கிற்கு வந்தேன். 

அப்போது தனுஷ் என்னிடம் வந்து வேட்டையன் படத்தில் நடிச்சிட்டு வறீங்களா? தலைவர் கூட நடிச்சீங்களா? என கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். உடனே தனுஷ் சார் நான் யாரை பார்த்தும் பொறாமை பட்டது கிடையாது. ஆனால் உன்னை பார்த்து நான் முதல் முறையாக பொறாமைப்படுறேன். தலைவருடன் நடிப்பது எனது கனவு என கூறியதாக” துஷாரா கூறியுள்ளார்.