த்ரிஷாவால் புலம்பி தள்ளும் பிரபலம்… வாழ்க்கையே நாசமாகிடுச்சு!

4 months ago 26

நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவரால் தனது வாழ்க்கையே நாசமாகி விட்டதாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கிரிதர் மாமிடிபள்ளி கூறியுள்ளார். 

அதன்படி அவர் கூறியதாவது, “நீண்ட நாட்களாக த்ரிஷாவை வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தேன். அந்த வகையில் இயக்குனர் கோவர்த்தன ரெட்டி இயக்கத்தில் ஒரு ஹாரர் கதையை த்ரிஷாவை வைத்து எடுத்தோம். 

அதற்காக அவங்களுக்கு ஒரு சம்பளம் நிர்ணயித்து படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது. நன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது தான் கோவர்த்தன ரெட்டி மற்றும் த்ரிஷாவால் பிரச்சனை வெடித்தது. 

படத்திற்கு நல்ல வியாபாரம் இருப்பதாக கூறி த்ரிஷா அவரின் சம்பளத்தை உயர்த்தி கேட்டு பிரச்சனை செய்தார். அந்த சமயத்தில் அவருக்கு அவ்வளவு மார்க்கெட்டும் இல்லை. 

ஆனாலும் அவரின் பிடிவாதத்தால் அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்ததால், என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு” என கூறியுள்ளார்.

Read Entire Article