10 விரலை காட்டிய நடிகை: பணப்பெட்டியோடு நடையை கட்டிய நிறுவனம்

3 years ago 374

இடுப்பு மடிப்பை காட்டி போட்டோஷூட் நடத்தி பிரபலமான நடிகை, ஒரு நிறுவன தயாரிப்பை விளம்பரம் செய்ய கேட்ட தொகை தான் அவர்களை அதிர வைத்துவிட்டதாம்.

தமிழ் பெண்ணான அந்த நடிகை கோலிவுட்டில் அறிமுகமாகி சில ஆண்டுகளாகிவிட்டாலும் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே இருக்கிறார். அவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகின.

அந்த புகைப்படங்கள் இந்த அளவுக்கு வைரலாகும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றார் நடிகை. அதன் பிறகு அவர் பெரிய முதலாளி வீட்டில் சில நாட்கள் தங்கினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்தால் இருந்த இடம் தெரியாமல் இருந்துவிட்டார்.

அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சின்னத்திரையில் தான் கூடுதல் கவனம் செலுத்துகிறார். மேலும் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய சமூக வலைதளத்தில் போஸ்ட் போடுமாறு பிரபல நிறுவனம் ஒன்று நடிகையிடம் கேட்டதாம்.

அதற்கு நடிகையோ, ரூ. 10 லட்சம் கொடுத்தால் போஸ்ட் போடுகிறேன் என்றாராம். உங்களுக்கே இதெல்லாம் ஓவராக தெரியவில்லையா என்பது போன்று ஒரு பார்வை பார்த்துவிட்டு இடத்தை காலி செய்தார்களாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...