12 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்

3 years ago 326

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவரது படம் கோடிகளை குவிப்பதால் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய்.

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியானது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்த விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். விஜய்க்கு வில்லனாக பவானி கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் தியேட்டரில் ரிலீஸ் ஆன இப்படம் வசூலை குவித்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 66வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய்யின் 66வது படத்தை இயக்க உள்ளார். 

இந்தப் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது விஜய்யின் 66வது படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளார். இந்த தகவலை அவரே சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் பேசியுள்ள பிரகாஷ் ராஜ், தற்போது ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே பிரகாஷ் ராஜ், விஜய்யுடன் இணைந்து ‘கில்லி', 'போக்கிரி', 'ஆதி', 'சிவகாசி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கில்லி படத்தில் செல்லம் செல்லம் என த்ரிஷா மீது காதல் வெறி கொண்ட வில்லனாக பட்டையை கிளப்பியிருப்பார் பிரகாஷ் ராஜ்.

விஜய்யும் பிரகாஷ் ராஜும் கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'வில்லு' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தனர். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க உள்ளார். 

இந்த காம்போ மீண்டும் இணைந்து நடிப்பதை அறிந்த ரசிகர்கள் செம ட்ரீட் இருக்கு என கொண்டாடி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...