14 வயதுக்கு மகள் இருக்க காமெடி நடிகருக்கு இரண்டாவது குழந்தை!

1 year ago 352

மலையாள சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வருபவர் பக்ரு. இரண்டு அடி 6 அங்குலம் என உயரம் குறைவாக இருக்கும் இவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். அத்துடன் அந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பிரதான கதாபாத்திரத்தில் நடித்த உயரம் குறைவான நடிகர், சினிமாவை இயக்கிய உயரம் குறைவான இயக்குநர் என்று கின்னஸ் சாதனைக்கு சொந்தமானார். 

அவரது பெயரும், சாதனையும் 2008ஆம் ஆண்டு பதிப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. இதனால் மலையாள திரையுலகினர் இவரை கின்னஸ் பக்ரூ என்றே அழைத்து வருகிறார்கள்.

தமிழில் டிஸ்யூம் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்துக்காக தமிழ அரசு சினிமா விருதுகளில் சிறப்பு பரிசையும் வென்றார். இதன்பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த இவர், மலையாள சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இது தவிர சீரியல்கள், டிவி ஷோக்களில் பங்கேற்று வரும் பக்ரூவுக்கு மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளார்கள். இதையடுத்து பக்ரூ தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

பக்ரூவுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அந்தக் குழந்தையை தனது மூத்த மகளுடன் இணைந்து கையில் ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 

இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பக்ரூவை வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...