16 வருடங்களுக்கு பின் அருண் பாண்டியன் ரீ-என்ட்ரி! என்ன படம் தெரியுமா?

3 years ago 196

மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து தயாராகி இருந்தது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரிய போட்டிக்கு நடுவில் நடிகர் அருண் பாண்டியன் வாங்கினார். அதோடு இப்படத்தில் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அன்பிற்கினியாள்’ என பெயரிட்டுள்ளனர். கடந்த 16 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தை கோகுல் இயக்கி உள்ளார். இவர் விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...