2 வாரத்திற்கு முன்பே தான் இறக்கப் போவதை உணர்ந்த இயக்குநர் தாமிரா?

3 years ago 330

ரெட்டைச் சுழி படம் மூலம் இயக்குநரானவர் தாமிரா என்கிற காதர் முகைதீன். திருநெல்வேலியை சேர்ந்த அவர் கே. பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர். 

இயக்குநர் ஷங்கர் தயாரித்த ரெட்டைச் சுழி படத்தில் தன் குருநாதர் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை நடிக்க வைத்தார் தாமிரா.

அதன் பிறகு சமுத்திரக்கனியை வைத்து ஆண் தேவதை படத்தை இயக்கினார். பெரிய தயாரிப்பு நிறுவனத்திற்காக மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வந்த தாமிராவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள்.  அங்கு அவர் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் தான் தாமிரா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடைசியாக போட்ட போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது,


இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை.

என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன்.

இனி யாரோடும் பகைமுரண் இல்லை.

யாவரும் கேளிர் என தெரிவித்துள்ளார்.

தாமிராவின் போஸ்ட்டை பார்த்தவர்களோ, தான் இறந்துவிடுவோம் என்பது முன்கூட்டியே அவருக்கு தெரிந்துவிட்டதா?, அதனால் தான் இப்படி ஒரு போஸ்ட் போட்டாரா?. இறக்கும் முன்பு சிலருக்கு அது தெரியுமாம். 

தாமிராவுக்கும் அப்படி தான் நடந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் ஏன் இப்படி சொல்லியிருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...