20 கிலோ எடையைக் குறைத்த கீர்த்தி சுரேஷ் அக்கா... காரணம் தெரியுமா?

3 years ago 357

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் இப்போது கீர்த்தி சுரேஷின் அக்கா இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவிட்டுள்ளார். சும்மா 20 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். 


இதுபற்றி கீர்த்தி சுரேசின் அக்கா ரேவதி தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு இதுதான். ‘என் லைப் முழுசுமே எடை பிரச்னையில் போராடி வந்தேன். 

என் அம்மா, தங்கச்சியோடு ஒப்பிட்டு என்னை விமர்சிக்குறாங்க. நான் டீன் ஏஜில் இருந்தபோது, என் அம்மா, தங்கச்சி போல் அழகில்லை என நினைத்தேன். நான் நார்மல் இல்லைன்னு நினைச்சேன்.

மக்களும் அதையே சொன்னதால் ஆழமாக நம்பினேன். என் மாப்பிள்ளை என்னிடம் ப்ரபோஸ் செய்தபோது, என்னிடம் அப்படி எதைக் கண்டார்னு வியந்தேன். என்னை பார்ப்பவர்கள் எல்லாம் வெயிட்டை குறை என்றே பேசினார்கள். 

என் அம்மாவும், தங்கச்சியும் அழகாக இருப்பதாக ஒரு பெண் புகழ்ந்தார். நான் நன்றி சொன்ன போது, ஆனால் உனக்கு என்ன ஆச்சு? எனக் கேட்டார். மணிக்கணக்கில் கண்ணாடி முன்பு நின்னுகிட்டு யோசிப்பேன். 

எனக்கே என் மீது வெறுப்பு வந்துச்சு. வேலையும், பொறுப்பும் அதிகம் இருந்துச்சு. ஆனாலும் நான் அழகாக உணரல. தங்கச்சி கீர்த்தி எப்பவும் என்பக்க. மோசமாக பேசுபவர்களிடம் கூறினாள். 

அவளை விட நான் அழகுன்னு அவளோட பிரண்ட்ஸ் சொல்வதாக சொன்னாள். எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

என்னோட அம்மா அடிக்கடி நான் அழகான, தைரியமான, திறமையான பொண்ணுன்னு சொல்லுவாங்க. என் வீட்டுக்காரரும் அதையே சொன்னப்போ ஆச்சர்யமா இருந்துச்சு. 

என் மேல என்னோட யோகா டீச்சர் தாரா சுதர்ஷன் ரொம்ப நம்பிக்கை வைச்சாரு. என் பலத்தை சுட்டிக்காட்டுனதும் அவர்தான். நான் அழகுன்னு எனக்குள்ள செல்ப் கான்பிடண்ட் உருவாக்குனாரு. இப்போ 20 கிலோ எடை குறைச்சுட்டேன்.’என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...