200 கோடி மோசடி வழக்கில் கார்த்தி பட நடிகை கைது

3 years ago 377

நடிகை லீனா மரியா பால் இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பிரியாணி படத்தில் லீனா நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகை லீனா தற்போது 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காதலர் சுகேஷ் சந்திரசேகர் உடன் ஒரு தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே அமலாக்கத் துறையால் பலமுறை விசாரணை செய்யப்பட்டுள்ளார். 

சுகேஷ் மீது ஏற்கனவே 21 வழக்குகள் உள்ளது.  கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து மற்றும் மோகன்ராஜ் என்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதில் கைது செய்யப்பட்ட கம்லேஷ் கோத்தாரி மூலம் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் லீனா பால் இருவரும் ஒரு பங்களாவை வாங்கியுள்ளனர். 

அதில் சாமுவேல் லீனாவின் மேலாளராக வேலை செய்த்துள்ளார்.  அருண் முத்து சுகேஷ் சந்திரசேகருக்கு சொகுசு கார் அளித்து உதவியுள்ளார். மோகன்ராஜ் சுகேஷ் சந்திரசேகரின் நீண்டகால வழக்கறிஞர்.

லீனாவின் காதலர் சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இல்லை சின்னம் பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி மோசடி செய்த புகாரில் சிறையில் இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...