2018 ஆம் ஆண்டு, கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் ‘கே.ஜி.எஃப்’.
கன்னட நடிகர், யஷ் நடித்த இந்தப் படம், 5 பாகங்களாக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, யஷ்ஷின் பிறந்தநாளையொட்டி, கே.ஜி.எஃப் படக்குழு, “கே.ஜி.எஃப் – சேப்டர் 2” டீசரை வெளியிட்டது.
இந்த காணொலி, யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் 10 கோடி வியூஸ்களை கடந்து, பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
இப்படி ஏகோபித்த ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து யஷ், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அன்பு மூலம் எனக்கு இன்று மிகச் சிறந்த நாளாக மாறியுள்ளது. நன்றி. லவ் யூ ஆல்…’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.