27 வயதாகியும் இதுவரை ஒரு தடவைகூட அதை செய்யவில்லை... உண்மையை உடைத்த நடிகை!

3 years ago 853

அச்சம் என்பது மடமையடாவில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மஞ்சிமா மோகன்.இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருக்கிறார். 

இந்நிலையில் சில படங்களில் ப்ரமோஷனுக்காக வெளியில் சென்று வரும் மஞ்சிமாவிடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓட்டு போடுவது பற்றி கேட்டுள்ளார். அதற்கான விழிப்புணர்வுகளில் கலந்து கொண்டதுண்டா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு மஞ்சிமா மோகன் இதுவரைக்கும் நான் எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டு போடவில்லை என்றும் அதற்கான சூழ்நிலை அமையவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வெளியூர் ஏதாவது படப்பிடிப்பு நடந்து வரும்.

அதனால் என்னால் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு போக முடியாது என்றும் மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து படங்கள் எடுப்பதால் தன்னால் நின்று விடக் கூடாது என்பதற்காகவும் அதனாலதான் ஓட்டு போட முடியாமல் போனதாக விளக்கம் அளித்தார்.

அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக இனிவரும் தேர்தல்களில் ஓட்டு போடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...