2ஆவது கணவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராதா... என்ன ஆச்சு?

3 years ago 388

பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். 

முதல் கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ள நடிகை ராதா, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே வசந்த ராஜா, தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து கொடுமைபடுத்துவதாகவும் நடிகை ராதா நேற்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை ராதா, இன்று அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார். கணவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால், அந்த புகாரை வாபஸ் பெற்றதாக நடிகை ராதா தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...