3 நாளில் 50 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதி படம்

3 years ago 241

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் திகதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா.

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், உப்பென்னா படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...