34 ஆண்டுகளுக்கு பிறகு 'கரகாட்டக்காரன் 2' ... வெளியான தகவல்

1 year ago 292

80-களில் டாப் நடிகராக இருந்த ராமராஜனின் நடிப்பில் உருவான திரைப்படம் 'கரகாட்டக்காரன்'. கிராமத்து மண்வாசணையில் கடந்த 1989-ஆம் ஆண்டு உருவான இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார்.

இந்த படத்தில்ல கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

கரகாட்டம் கதைக்களம் கொண்ட இந்த படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக உள்ளது. 

முதல் பாகத்தை கங்கை அமரன் இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை அவரது மகன் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் ராமராஜன் வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...