38 ஆண்டுகள் ஆகியும் ரஜினியோடு நடிக்காத ஒரே நடிகை... யார் தெரியுமா?

3 years ago 834

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என ரஜினியின் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அது இப்போதும் ரஜினிக்கு பொருந்தும். இன்றும் ரசிகர்கள் மனதில் நிரந்தர சூப்பர் ஸ்டாராகவே உள்ளார் ரஜினிகாந்த்.

கருப்பு, வெள்ளை காலம் எனப்படும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் தொடங்கி, கலர் படம் காலம் வரை திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கோச்சடையானில் அனிமிசேனாகவும் வந்தார். 

2.0 திரைப்படத்தில் 2 டி தொழில்நிட்பத்திலும் நடித்தார். இத்தனை காலத்தையும் வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் சாத்தியப்படுத்தியதில்லை.


1983 ல் இருந்தே தமிழ், மலையாளம் என பிஸியாக இயங்கிவரும் ஒரு நடிகை மட்டும் இதுவரை ரஜினிக்கு ஜோடியாக நடித்தது இல்லை. அவர் நடிகை ஊர்வசி தான்.

கமலோடு மைக்கேல் மதன காமராசன் படத்தில் நடித்திருக்கும் ஊர்வசியைத் தான் கமலுக்கு அதிகம் பிடிக்கும். சுந்தரி நீயும், சுந்தரன் நானும் பாடல் இப்போதும் பலருக்கு பேவரட்.

என்னதான் ஸ்டைலே பிரதானமாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் காமெடியிலும் கலக்குவார். அதேபோலத்தான் நடிகை ஊர்வசியும் காமெடியில் கலக்குவார். இந்த காம்பினேஷலில் ஒரு படம் உருவாகியிருந்தால் அது தவிர்க்க முடியாத படமாகவே இருந்திருக்கும்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...