44 வயதில் திருமணம் ஏன்? ரஜினி பட நடிகை விளக்கம்!

1 year ago 183

விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யவம்சம் படத்தில், சரத்குமாருக்கு அண்ணியாக நடித்தவர் லாவண்யா. அதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அஜித்தின் தங்கையாகவும், படையப்பா படத்தில் ரஜினியின் தங்கையாகவும் நடித்து கவனமீர்த்தார்.

அதை தொடர்ந்து பெரியளவில் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கினார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அருவி' தொடரில் நடித்து வருகிறார். அவருடைய லட்சுமி கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகை லாவண்யா, தொழிலதிபரான பிரசன்னா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் பெற்றோர் முன்னிலையில் நடந்துள்ளது. கடந்த 1979-ம் ஆண்டு பிறந்த லாவண்யாவுக்கு தற்போது வயது 44 ஆகும். இதுதான் அவருக்கு முதல் திருமணம்.

எதற்காக இவ்வளவு கால தாமததுக்கு பிறகு லாவண்யா திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால் குடும்பத்தினர் முன்னேற்றத்துக்காக லாவண்யா தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாகவும், தற்போது அனைவரும் செட்டிலாகிவிட்டதால் திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை லாவண்யா மற்றும் பிரசன்னா தம்பதிக்கு அருவி சீரியல் குழுவினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...