5 வருடமாக காதலித்த நடிகை குஷ்பு! பிரபுவை பிரிய இதுதான் காரணம்!

4 years ago 993

2000 ஆம் ஆண்டுகளில் நடிகை குஷ்பூ மற்றும் பிரபு காதலித்து வருவதாகவும், ஆனால் சிவாஜி குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் அவர்களது காதல் திருமணத்தில் முடியவில்லை என கிசு கிசுக்கப்பட்டது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பூ, பிரபுக்கும் எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான். அது மிக அழகான தருணமும் கூட ஆனால் அது ஒரு சமயத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.

அதன் பிறகு தான் சுந்தர் சி என் வாழ்கையில் வந்தார் என குஷ்பூ தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து, பிரபுவை பிரிந்தது ஏன்..? என்ற கேள்விக்கு, இந்த தருணத்தில் பிரபு உடனான உறவை பற்றி பேசி தற்போது பேரன் பேத்தி உடன் சந்தோஷமாக இருக்கும் அவரை பற்றி பேசி வீணாக சங்கடத்தை அவருக்கு கொடுக்க வேண்டாம் என நினைக்கிறன். எனக்கும் 18 வயதில் மகள் உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், சுந்தர் சி பற்றி, "என்னிடம் சுந்தர் சி அவருடைய காதலை பற்றி தெரிவிக்கும் போது திருமணத்தை மனதில் வைத்து தான் பேசினார். அது எனக்கு பிடித்து இருந்தது.

அதே வேளையில், என்னை வாழ வைப்பதற்காக தேவையான அனைத்தும் செய்து வைத்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்து இருந்தார் பின்னர் தான் 1999 ஆம் ஆண்டு மிக அழகான ஒரு வீட்டை கட்டினார்.

பின்னர் தான் 2000 ஆம் ஆண்டு எங்கள் திருமணம் நடைபெற்றது என தெரிவித்து உள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...