54 வயதிலும் இப்படியா..? - இறுக்கமான உடையில் நதியா - வாயை பிளந்த ரசிகர்கள்..!

3 years ago 535

ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் என்னவென்றால் ஷரினா மொய்டு. 

 

இவர் மும்பையில் பிறந்தார். நதியா தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடி கட்டி பறந்த நடிகை. “பூவே பூச்சூடவா” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தமிழ் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். 


முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றது நதியாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் பெரிதானது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த படங்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்தது. 

 

நதியாவின் கவர்ச்சி இல்லாத நடிப்பு தான் அவருடைய பெரிய பிளஸ். கவர்ச்சி கதாபாத்திரம் என்றால் நடிக்க சம்மதிக்கவே மாட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வரும் நதியா தனது வேலை முடிந்த உடன் தனது வீட்டிற்கு சென்று விடுவாராம். 

 சில வருடங்களுக்கு முன் ஜெயம்ரவியின் “M குமரன்” என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அக்கா போல இருப்பார். 

தற்பொழுது 53 வயது ஆகிறது ஆனால் இன்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும் நதியாவை பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான டீசர்ட் , லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த படி சர்வாங்காசனா என்ற ஆசனத்தை அசால்டாக செய்து அசத்துகிறார் நதியா.

இதனை பார்த்த ரசிகர்கள், உங்கள் ஃபிட்னஸ் மந்திரம் என்ன..? எப்படி இந்த வயதிலும் இப்படி ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...