ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் நிக்கோலஸ் கேஜ் (வயது 57) தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை ஐந்தாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
லாஸ் வேகாஸில் உள்ள வின் ஹோட்டலில் பிப்ரவரி 16-ம் திகதி நடந்த இந்த திருமணத்தை நடிகரின் பிரதிநிதி ஷானன் பார் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.
இத்திருமணம் ஒரு சிறிய மற்றும் நெருக்கமான விழா என்று கூறப்படுகிறது. "மணமகனின் மறைந்த தந்தையின் பிறந்தநாளை கெளரவிப்பதற்காக திருமண திகதி தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் பாரம்பரிய கத்தோலிக் மற்றும் ஷின்டோ சபதங்களை வால்ட் விட்மேன் கவிதைகளுடன் பரிமாறிக்கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் ஒரு சிறிய கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர். அதில் நிக்கோலஸின் முன்னாள் மனைவி, ஆலிஸ் (தற்போது நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்) மற்றும் அவர்களின் மகன் கல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்" என கேஜின் பிரதிநிதி மேற்கோள் காட்டினார்.
26 வயதான கியோட்டோவைச் சேர்ந்த மணப்பெண் கிமோனா கையால் தயாரிக்கப்பட்ட ஜப்பானிய உடையை அணிந்திருந்தார். நிக்கோலா கேஜ் டாம் ஃபோர்டு டக்ஸ் உடையை அணிந்திருந்தார்.
எரிகா குக்கியுடன் மார்ச் 2019-ல் நான்கு நாட்கள், நடிகை பாட்ரிசியா அர்குவேட்டுடன் 1995 முதல் 2001 வரை, லிசா மேரி பிரெஸ்லியுடன் 2002 முதல் 2004 வரை, ஆலிஸ் கிம்முடன் 2004 முதல் 2016 வரை திருமணம் செய்து வாழ்ந்தார் நிக்கோலஸ்.