நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் இணந்திருந்தார். பின்னர் செல்வராகவனுடன் சாணி காகிதம் படத்திலும் இணைந்தார்.
கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த பெண்குயின் திரைப்படம் கொரோனா காலத்தில் தியேட்டர் மூடப்பட்டு கிடந்த போது ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது தெலுங்கில் Good Luck Sakhi, Rang De, Aina Istham Nuvvu ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் வரலாற்று கதை கொண்ட Marakkar: Arabikadalinte Simham படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் விக்ரம் பிரபுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவருடன் விழா ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிளாக் அண்ட் ஒயிட் பிரிண்டாக வெளியிட்டுள்ளார்.