வீட்டுக்குள் சடலமாக கிடந்த பிரபல ஆபாச பட நடிகை... என்ன நடந்தது?

3 years ago 1041

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் லாரன் ஸ்காட்(வயது27). இவர் டகோடா ஸ்கை எனும் பெயரில் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.

கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவரை மினியோபோலிஸ் பொலிஸார் கால் முட்டியினாலேயே நசுக்கி கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதன் பின்னர், கடந்த மே4ம் திகதி அன்று ஜார்ஜ் பிளாய்டு ஓவியத்திற்கு முன்பு டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்கோடா . அவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்துள்ளார். உடலை மீட்ட பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார் என்று தெரியவந்துள்ளது.

மேலும், டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கடந்த ஆண்டு கொரோனாவினால் காலமானார்கள். அதனால் மிகுந்த மன உளைச்சலில் டகோடா இருந்ததாக அவரது அத்தை தெரிவித்துள்ளார்.

அடிக்கடி தனக்கு அமானுஷ்ய சத்தங்கள் கேட்டு வருவதாகவும், அவற்றுடன் தான் பேசி வருவதாகவும் டகோடா தன்னிடம் சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார் டகோடா அத்தை.

டகோடா வீட்டுக்குள் பிணமாக கிடப்பதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில்தான் பொலிஸார் உடலை மீட்டுள்ளனர். டகோடா ஸ்கை மரணம், அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...