ஒரு டஜன் குழந்தைகள் வேண்டும்... பிரபல நடிகையின் அப்படிப்பட்ட ஆசை

4 years ago 462

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. 

இதற்கு காரணம் கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான்.

நிக் ஜோன்ஸ் உடனான திருமண உறவு மற்றும் கலாச்சார இடைவெளி வெளிப்படையாகவே பேசி வருகிறார் பிரியங்கா. 

இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பிரியங்கா சோப்ரா கூறியதாவது, ‘எனக்கும், நிக்கிற்கு இடையேயான உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. வயது ஒரு பிரச்சனையே இல்லை, இந்திய கலாச்சாரத்தை நிக், புரிந்துக்கொண்டுள்ளார். 

எங்கள் உறவு சாதாரண ஜோடிகளை போல ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். 

அதுவும் ஒன்றல்ல, ஒரு கிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பெற்றுக்கொள்ள ஆசை’ இவ்வாறு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...