80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி

4 years ago 290

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் மும்பையில் நடிகை குஷ்பு, பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் ஆகியோரை நதியா சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நதியா, “80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...