90 களில் கொடி கட்டி பறந்த பெப்சி உமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

3 years ago 594

பெப்சி உமா என்று சொன்னால் இன்றைக்குக் கூட இளைஞர்கள் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய அழகும், குரலும் ரசிகர்களை கட்டி இழுத்தது. 

மேலும், 90 கால கட்டங்களில் போன் பிரபலம் இல்லாத காலத்தில் கூட அதிக ரசிகர்களை கொண்டவர். அதோடு அவருடைய சிரிப்பு ,அழகு, குரல் என அவரை புகழாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் இவர் சினிமா நடிகைகளை விட கொள்ளை அழகும், ரசிகர்களையும் கொண்டவர். மேலும், என்றும் மாடர்ன் உடைகளை போடாதவர், அதோடு அவர் அழகாக வண்ண வண்ண புடவைகளை உடுத்தி கொண்டால் பொதும் பார்ப்பதற்கு கண்களை கவர வைக்கும். அது தான் அவருடைய கூடுதல் சிறப்பும் ஆகும்.


அதுமட்டும் இல்லாமல் இன்று வரை அவர் இடத்தை யாராலும் பூர்த்தி செய்யவில்லை. மேலும், எந்த விஜே கூட அவருடைய இடத்தை பிடிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அன்றைய காலத்தில் பெப்சி உமா நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதற்கு காரணம் கொஞ்சி கொஞ்சி பேசும் உமாவின் பேச்சு தான். 

கிட்டத்தட்ட உமாவிற்கு ஆகவே 18 வருடங்கள் பிரபலமாக ஒளிபரப்பானது. பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான பெப்சி உமா நிகழ்ச்சியை பற்றி தற்போது பேசினால் கூட அனைவருக்கும் ஞாபகம் வந்து விடும் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

பிரபலமாக இருந்த காலத்தில் பெப்ஸி உமாவிற்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்த்துள்ளார். 

ஷாருக்கானுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கூப்பிட்டு உள்ளனர் அதையும் நிராகரித்துள்ளார். தொகுப்பாளினிக்கு முதன்முதலாக கட்-அவுட் வைக்கப்பட்டது என்றால் இவருக்கு தான்.


அந்தக் காலக்கட்டங்களில் குஷ்புக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். அவர் ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதில் திரைப்பட நடிகர் நடிகைகளையும் முன்னணி பிரமுகர்களையும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை அவர்களின் நேர்காணல் மூலம் மக்களுக்கு நிறைய சுவாரசியமான கதைகளை தெரியப்படுத்தினார் .

இந்த அளவிற்கு பிரபலமான உமா தற்போது சினிமா மற்றும் டிவியில் இருந்து விலகி ஒரு நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...